சேலத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் கைது

0பார்த்தது
சேலத்தில் தொழிலாளியிடம் பணம் பறித்த 3 பேர் கைது
சேலம் பட்டைக்கோவில் பகுதியைச் சேர்ந்த தச்சு தொழிலாளி ஆனந்தபாபு (29) நேற்று குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு அருகே நடந்து சென்றபோது, 3 பேர் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.6 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தி, பிரேம்குமார் (25), கீர்த்தி கிஷோர் (19), விக்னேஸ்வரன் (19) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.