சேலம் தாதகாப்பட்டி மூனாங்கரடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த போஸ் என்கிற ரவிக்குமார் (24), மூனாங்கரடு சவுந்தர்ராஜ் (24), ஜான்சன்பேட்டை முருகேஸ்வரன் (26) என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.