சேலத்தில் கணினி மென்பொருள் கடையில் திருடிய 3 பேர் கைது

3பார்த்தது
சேலத்தில் கணினி மென்பொருள் கடையில் திருடிய 3 பேர் கைது
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த முத்துக்குமார் (37) என்பவருக்குச் சொந்தமான அன்னதானப்பட்டியில் உள்ள கணினி மென்பொருள் கடையில், கடந்த 9-ஆம் தேதி மர்ம நபர்கள் காவலாளியைத் தாக்கி கழிவறையில் பூட்டிவிட்டு, ஹார்ட் டிஸ்க், மோடம், செல்போன் உள்ளிட்ட சுமார் ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்களைத் திருடிச் சென்றனர். இது தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபிரசாத் (32), மணியனூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (29), தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (30) ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி