சேலம் சின்ன கொல்லப்பட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் சசிகுமார் (25) என்பவருக்கும், சவுந்தர்யா (34) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சவுந்தர்யாவின் கணவர் சபரி கண்டித்துள்ளார். ஆபாச படங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படும் சசிகுமாரை, சபரி மற்றும் சிலர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. காயமடைந்த சசிகுமார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபரி, சவுந்தர்யா, பாலமுருகன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.