சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டாஸில் கைது

4பார்த்தது
சேலத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 3 பேர் குண்டாஸில் கைது
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபு, சபரிநாதன், தினேஷ் ஆகிய மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர காவல் ஆணையர் அணில் குமார் உத்தரவிட்டார். இவர்கள் மூவரும் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இவர்களின் மீது கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி