சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரை சேர்ந்த தினேஷ் குமார் (20), குகை பகுதியை சேர்ந்த ரமேஷ், எருமாபாளையத்தை சேர்ந்த தயாளன் ஆகிய மூவர் அடிதடி வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவாக இருந்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில், அன்னதானப்பட்டி போலீசார் நேற்று அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தினேஷ் குமார் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரமேஷ் மற்றும் தயாளன் கடந்த 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.