சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 30 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹடிமணி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, ஓமலூர் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தர்மபுரி மாவட்டம் கெலமங்கலத்திற்கும், ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்தி நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.