தமிழ்நாடு அரசு
போக்குவரத்து கழக சேலம் கோட்டம், கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை 6 நாட்களுக்கு 300 சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், வைகாசி பவுர்ணமியையொட்டி பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வசதியாக மே 30 மற்றும் 31 ஆகிய 2 நாட்கள் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.