சேலம் மாவட்டம் தாரமங்கலம், ஓமலூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் பகுதிகளில் போதை ஊசி, மாத்திரைகள் பயன்படுத்தும் வாலிபர்கள் குறித்து போலீஸ் எஸ்பி கவுதம் கோயலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (24) என்பவரிடம் இருந்து 39 போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மல்லூர் ஜீவா (24), கிருஷ்ணமூர்த்தி (28), சுப்பிரமணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.