சேலம் கொண்டலாம்பட்டி போலீசார் ரோந்து ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆண்டிப்பட்டி சத்யா நகரை சேர்ந்த சாரதா (வயசு 60), பெரியபுத்தூர் பகுதி இச்சிமரத்துகாட்டை சேர்ந்த வசந்தா (55) ஆகியோர் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று மது விற்றதாக ஆண்டிப்பட்டியை சேர்ந்த செல்வம் (47), செல்வி (70) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 95 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.