10ம் வகுப்பு தேர்வுஎழுதிய சேலம் சிறை கைதிகள் 41பேர் தேர்ச்சி

0பார்த்தது
10ம் வகுப்பு தேர்வுஎழுதிய சேலம் சிறை கைதிகள் 41பேர் தேர்ச்சி
தமிழகம் முழுவதும் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை சேலம் மத்திய சிறையில் 41 கைதிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சிறையில் தேர்வு எழுதிய அனைத்து 41 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தண்டனை கைதிகளான ராஜ்குமார் 324 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், கவியரசன் 316 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், சிவகுமார் மற்றும் விசாரணை கைதியான வெங்கடேசன் ஆகியோர் தலா 311 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற கைதிகளை சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் அதிகாரிகள், சிறைப்பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி