சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் 45 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. ரூபாய் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில், பள்ளிக்கு அருகில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 45 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.