சேலம்: ஆன்லைன் பண மோசடி; 5 பேர் கைது

58பார்த்தது
சேலம்: ஆன்லைன் பண மோசடி; 5 பேர் கைது
ஆன்லைன் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து பொதுமக்களை லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதன முறையில் மோசடி செய்து வருகின்றனர். இந்த குற்றவாளிகளை மாநிலம் முழுவதும் பிடிப்பதற்காக ஆபரேஷன் 'திரை நீக்கு' என்ற பெயரில் சைபர் கிரைம் போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த வகையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் 'திரை நீக்கு' ஆபரேஷன் மூலம் மேட்டூரை சேர்ந்த பிரவீன்குமார், சங்ககிரியை சேர்ந்த வெங்கடேஷ், திருமூர்த்தி, கொங்கணாபுரத்தை சேர்ந்த பிரபு, மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 

விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் உள்பட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் ஆன்லைன் மூலம் நூதன முறையில் லட்சக்கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 45 ஏ.டி.எம். கார்டுகள், 11 வங்கி புத்தகங்கள், செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 'திரை நீக்கு' ஆபரேஷன் மூலம் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி