தம்பதியை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளையடித்த 5 பேர் கைது

1பார்த்தது
தம்பதியை கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளையடித்த 5 பேர் கைது
சேலம் அம்மாப்பேட்டை அருகே மாசிநாயக்கன்பட்டி பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த என்ஜினீயர் சந்திரசேகரன் வீட்டில், கடந்த 12-ந் தேதி நள்ளிரவில் குரங்கு குல்லா அணிந்த மர்ம நபர்கள் புகுந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். பணம் தர மறுத்ததால், வீட்டில் இருந்த 1½ பவுன் நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, தீனா, அய்யனார், ரகுவரன், வசந்தகுமார், மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி