சேலம் வழியாக செல்லும் ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் கருப்பூர் அருகே இன்று அதிகாலை வாராந்திர சிறப்பு ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில், பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த கைப்பையில் இருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்ட கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
