சேலம்: லாரி டிரைவர் வீட்டில்.. 5 பவுன் நகை திருட்டு

57பார்த்தது
சேலம்: லாரி டிரைவர் வீட்டில்.. 5 பவுன் நகை திருட்டு
சேலம் அம்மாபேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் தவுலத், லாரி டிரைவர். இவருடைய மனைவி ஷாஜாதி (வயது 52). இவர் கடந்த மாதம் 4-ந் தேதி சென்னையில் உள்ள அக்காள் வீட்டின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். பின்னர் அவர் 6-ந் தேதி வீட்டுக்கு வந்தார்.
இதையடுத்து தான் அணிந்து சென்ற நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அவர் பீரோவை திறந்து பார்த்த போது 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதையடுத்து நகை திருட்டு போனது குறித்து ஷாஜாதி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி