சேலம் மத்திய சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் 3 அறைகளில் கைதிகள் செல்போன் பயன்படுத்தியது தெரியவந்தது. 2 செல்போன்கள், 2 சிம்கார்டுகள், சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வழிப்பறி மற்றும் கஞ்சா வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள சேலத்தைச் சேர்ந்த ரியாசுதீன் (24), மாதேவா (22), நவீன்குமார் (22), நந்தகுமார் (24), சூர்யா (24) ஆகிய 5 கைதிகளிடம் சிறை அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.