கர்நாடகா மற்றும் கேரளா அரசுகள் தமிழக ஆம்னி பஸ்களுக்கு ₹1.15 கோடி வரை அபராதம் விதித்ததை அடுத்து, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை வரி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நேற்று முதல் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் இருந்து பெங்களூரு மற்றும் கேரளாவிற்கு இயக்கப்படும் 50 ஆம்னி பஸ்கள் நேற்று இரவு இயக்கப்படவில்லை. முன்பதிவு செய்திருந்த மற்றும் செய்யாத பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு செல்லும் அரசு பேருந்துகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.