சேலத்தில் 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 2பேர் கைது

2பார்த்தது
சேலத்தில் 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்: 2பேர் கைது
சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியில் டேங்கர் லாரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு கலப்பட டீசல் நிரப்பப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று முன்தினம் நடந்த சோதனையில், ஒரு டேங்கர் லாரியில் இருந்து 5 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை தனியார் பஸ்களுக்கு நிரப்பிக் கொண்டிருந்தபோது, போலீசார் அதைப் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன் (27) மற்றும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமசாமி (34) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி