சேலம் ரயில்வே போலீசார், சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மேற்குவங்க மாநிலம் சாலிமரிலிருந்து நாகர்கோவிலுக்குச் சென்ற சிறப்பு ரயிலில் கருப்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ரயிலின் பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு கைப்பைகளில் இருந்து சுமார் 9 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.