சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்

639பார்த்தது
சேலத்தில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்
சேலம் மல்லமூப்பம்பட்டி திருப்பதி நகரைச் சேர்ந்த தேவி (45) என்பவர், நேற்று மாலை மொபட்டில் ஜாகீர்அம்மாபாளையம் புறாக்காடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவரைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், தேவியின் மொபட்டை மறித்து கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தேவிக்கு முகம் மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.