சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவகுமார் (36) திருட்டு வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அவர் வழக்கமாக பரோலில் சென்று வருவார். கடந்த 13-ந் தேதி பரோலில் சென்ற அவர், நேற்று மாலை 6 மணியுடன் பரோல் முடிவடைந்தும் சிறைக்குத் திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்தபோது, அவர் மாலை 4 மணிக்கே சிறைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகக் கூறினர். சிவகுமார் திடீரென தலைமறைவானது குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.