சேலம் நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சங்கர், அஸ்தம்பட்டி டிவிஎஸ் காலனியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் என்பவரிடம் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். மாநகராட்சி 11வது வார்டு தில்லை நகர் 4வது கிராஸ் பகுதியில் மழைநீர் வடிகால் கான்கிரீட் பணி நடைபெற்று வந்தது. இதில், மழைநீர் வடிகால் கால்வாயைச் சுத்தம் செய்ய மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து மற்றொரு கால்வாயில் விடும் பணியில் சங்கர் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.