சேலம் அருகே டூவீலரில் சென்ற வாலிபர் தவறி விழுந்து சாவு

1பார்த்தது
சேலம் அருகே டூவீலரில் சென்ற வாலிபர் தவறி விழுந்து சாவு
சேலம் எருமாபாளையம் பகுதியைச் சேர்ந்த தினகரன் (21) மற்றும் அவரது நண்பர் மோதிநாத் (25) ஆகியோர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினகரன் உயிரிழந்தார். மோதிநாத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி