சேலம் உடையப்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (24) என்பவர், பர்னிச்சர் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 2 மாதங்களாக அந்தப் பெண் விக்னேஷுடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். காதல் தோல்வியால் மனமுடைந்த விக்னேஷ், நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேடியும் அவர் கிடைக்காததால், அவரது தாய் சிவகாமி அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.