சேலம் மணியனூரைச் சேர்ந்த வழிப்பறி குற்றவாளி கிருஷ்ணகுமார் (35) கொண்டலாம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்து தலைமறைவான அவரை, நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில், அன்னதானப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்தபோது போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.