சுற்றுலா சென்ற வேளாண் அதிகாரி ரயிலிருந்து தவறி விழுந்து பலி

2பார்த்தது
சுற்றுலா சென்ற வேளாண் அதிகாரி ரயிலிருந்து தவறி விழுந்து பலி
கேரளாவிற்கு சுற்றுலா சென்ற அமராவதி மாவட்ட வேளாண் அதிகாரி சந்தோஷ் கஜ்பேஜ், ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறைக்கு சென்றபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது, காகங்கரை-சாமல்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. சேலம் ரயில் நிலையம் வந்ததும், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர். தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சடலம் அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி