சேலம் ஓமலூர் அதிமுக திடீர் ஆலோசனை கூட்டம்

1010பார்த்தது
சேலம் ஓமலூர் அதிமுக திடீர் ஆலோசனை கூட்டம்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கட்சியினர் மனம் தளராமல், நம்பிக்கையுடன் செயல்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களை மீண்டும் தமிழக முதல்வராக அமர்த்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி