சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

464பார்த்தது
சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் குடிநீர் வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலைக் கண்டித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநகர மாவட்ட செயலாளர் பாலு முன்னிலை வகித்தார். வருகிற 24-ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது என்றும், வருகிற 23-ந் தேதி நடைபெறும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் திரளாக கலந்துகொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி