ஜெயலலிதா எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுகவினர் போராட்டம்

1134பார்த்தது
ஜெயலலிதா எம்ஜிஆர் சிலை முன்பு அதிமுகவினர் போராட்டம்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சி. வி. சண்முகம் தலைமையிலான ஒரு பிரிவினர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனால் அவர்களின் கட்சி பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். இந்நிலையில், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பாலு தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் சேலம் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுகவுக்கு துரோகம் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி