சேலம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வாகன ஓட்டிகளிடையே விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் வாகனங்களில் பொருத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கோகிலா தலைமையில், நரசோதிபட்டி பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில், பேருந்துகள் மற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் 50 ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.