தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 15வது நாளாக கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு, ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும், பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சாப்பாடு தட்டை கரண்டியால் அடித்தபடி ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.