சேலம் கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அங்கன்வாடி ஊழியர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.