சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று மாலை அங்கன்வாடி பணியாளர்களின் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ். ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் பத்மா தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.