சேலம் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டால் குடிநீர் கட்டணம் உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என்றும் கூறினார். இதைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.