மது அருந்த பணம் கேட்டு தகராறு: வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

0பார்த்தது
மது அருந்த பணம் கேட்டு தகராறு: வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
சேலம் மணியனூர் உத்தரப்பன்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை (23) என்ற கூலித்தொழிலாளி, நெத்திமேடு பகுதியில் மது அருந்த பணம் கேட்டபோது நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் விறகு கட்டையால் தாக்கப்பட்டார். இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண், சங்கர், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.