சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி செட்டிசாவடி ஊராட்சிக்கு உட்பட்ட உடைந்த பாலம் பகுதியில் சேதமடைந்த சாலை, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சீரமைக்கப்பட்டது. சாலை சீரமைப்பு கோரிக்கையை மக்கள் எம்எல்ஏ அருள்விடம் வைத்தனர். இதற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், மின்சாரம் மற்றும் தெருவிளக்குகள் இல்லாதது குறித்து மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி விரைந்து நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ உத்தரவிட்டார்.