10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஆசிரியர்களுக்கு தேர்வுபணி ஒதுக்கீடு

65பார்த்தது
10ம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஆசிரியர்களுக்கு தேர்வுபணி ஒதுக்கீடு
எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை 21 ஆயிரத்து 8 மாணவர்கள், 20 ஆயிரத்து 448 மாணவிகள் என மொத்தம் 41 ஆயிரத்து 456 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக ஆசிரியர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யும் ஆலோசனை கூட்டம் மாவட்டத்தில் 3 இடங்களில் நேற்று நடைபெற்றது.
சேலத்தில் புனித பால் நிதியுதவி பெறும் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு, சேலம் ஊரகம், நகர்ப்புறம், பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதேபோல் பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், நங்கவள்ளி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, தாரமங்கலம், வீரபாண்டி, மேச்சேரி மற்றும் காடையாம்பட்டி ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்களும், ஆத்தூர் கிரீன் பார்க் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியங்களை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு தேர்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி