100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி

0பார்த்தது
100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, சட்டசபை தேர்தலில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். சேலம் மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய தினமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 100% வாக்குப்பதிவு என்ற பெருமையை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் வலியுறுத்தினார்.