சேலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு ஊர்வலம்

490பார்த்தது
சேலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த விழிப்புணர்வு ஊர்வலம்
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. உதவி ஆணையாளர் தமிழ்வேந்தன் தலைமை தாங்கி, கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகம் முன்பு தொடங்கி உழவர் சந்தை, கடைவீதி வழியாக அன்னதானப்பட்டி போலீஸ் நிலையம் அருகில் ஊர்வலத்தை முடித்து வைத்தார். தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் சேர்த்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி