சேலத்தில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ரத்ததானம்

445பார்த்தது
சேலத்தில் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ரத்ததானம்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான அகில இந்திய ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் சங்கம் தனது 78வது ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு சேலத்தில் ரத்ததான முகாம் நடத்தியது. இது மூன்றாவது ஆண்டாக நடத்தப்பட்ட முகாம் ஆகும். சேலம் மண்டல துணை பொது செயலாளர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், சங்கத்தின் 78வது நிறுவன தினத்தை சிறப்பிக்கும் வகையில் 78 ஊழியர்கள் ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி