த. வெ. க. தலைவர் விஜய் உள்பட 3 பேர் மீது பாஜகவினர் புகார்

0பார்த்தது
சேலம் கிழக்கு மாவட்ட பா. ஜனதா வக்கீல் அணி துணைத்தலைவர் அஜீத் சாக்கோ, மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்து மக்களின் முதன்மையான கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த பக்தி பாடலான ‘மருதமலை மாமணியே முருகையா’ பாடல், சமீபத்தில் நடைபெற்ற த.வெ.க. 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் இழிவுபடுத்தி பாடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடலை இழிவுபடுத்திப் பாடிய பாடகர் வேல்முருகன் மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி