சேலத்தில் பா. ஜனதா கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

80பார்த்தது
சேலத்தில் பா. ஜனதா கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் அவரவர் வீடுகள் முன்பு கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகள் முன்பு நின்று கருப்பு கொடிகளை ஏந்தி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். 

சேலம் செவ்வாய்பேட்டை அருணாச்சலம் தெருவில் மாநகர் மாவட்ட தலைவர் சசிக்குமார் நேற்று காலை தனது வீட்டு முன்பு நின்று கையில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல், குரங்குச்சாவடியில் முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபுவும், செவ்வாய்பேட்டை வைத்தி தெருவில் சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத்தும் தங்களது வீடுகள் முன்பு நின்று கைகளில் கருப்பு கொடி ஏந்தி தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சூரமங்கலத்தில் மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், மல்லமூப்பம்பட்டியில் சேலம் வடக்கு ஒன்றிய தலைவர் எம்.எல்.பி. முருகன் உள்பட மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் அவரவர் வீடுகள் முன்பு கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி