கூட்டுறவு வார விழாவில் ரத்ததான முகாம்

1பார்த்தது
கூட்டுறவு வார விழாவில் ரத்ததான முகாம்
சேலம் மாவட்டத்தில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கூட்டுறவுத்துறை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலைய மாணவர்கள் என மொத்தம் 102 பேர் ரத்ததானம் செய்தனர். இந்த முகாமில் கூட்டுறவு சங்கங்களின் சேலம் மண்டல இணைப்பதிவாளர் ராஜ்குமார் மற்றும் பிற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி