சேலத்தில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த விவசாயி உடல் மீட்பு

1337பார்த்தது
சேலத்தில் டிராக்டருடன் கிணற்றில் விழுந்த விவசாயி உடல் மீட்பு
சேலம் நரசோதிப்பட்டி அசோக்நகரைச் சேர்ந்த 54 வயதான விவசாயி வெங்கடேசன், தனது டிராக்டரில் ஹாலோ பிளாக் கற்களை ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. இதில் டிராக்டருடன் வெங்கடேசனும் கிணற்றில் மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் டிராக்டரை மீட்டனர். இரவு 7 மணியளவில் வெங்கடேசனின் உடலும் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.