சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

886பார்த்தது
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று (மே 23) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. மதியம் வெடிகுண்டு வெடிக்கும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து உடனடியாக மாநகர காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆட்சியர் அலுவலகத்தில்  சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதுபோன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் 10வது மிரட்டல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி