சேலம் கலெக்டர் ஆபீசுக்கு 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

1581பார்த்தது
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (மே 20) காலை 9வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வந்த இந்த மிரட்டலை அடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு புரளி என தெரியவந்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் 8 முறை இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி