நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் புத்தகம் வெளியீட்டு விழா

0பார்த்தது
நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் புத்தகம் வெளியீட்டு விழா
சேலத்தில் நேற்று, நுகர்வோர் உரிமைகள் இயக்கம், பாரதி உரிமைகள் அறக்கட்டளை நிறுவனர் பூபதி எழுதிய ‘வாழ்வு என்றால் ஆயிரம் இருக்கும்’ என்ற புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வள்ளிநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணைய உறுப்பினர் ரேகாபிரியதர்ஷினி புத்தகத்தை பெற்றுக்கொண்டார். ரோட்டரி மாவட்ட ஆளுனர் சிவசுந்தரம் தலைமை தாங்கினார்.

தொடர்புடைய செய்தி