சேலம் சின்னத்திருப்பதி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தர் ராஜனின் மகன் சபரி (17). 6-ம் வகுப்பு வரை படித்துவிட்டு பெயிண்டிங்
வேலை செய்து வந்த சபரி, தனது சம்பளப் பணத்தை வீட்டிற்குத் தராமல் இருந்து வந்துள்ளார். சம்பளப் பணத்தைக் கேட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த செல்போனை உடைத்துள்ளார். இதனால் தந்தை கண்டித்ததில் மனம் உடைந்த சபரி வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டான். இச்சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.