சேலம் பொன்னம்மாப்பேட்டை ரயில்வே லைன் வடக்கு தெருவில், மது அருந்தும் பழக்கமுள்ள சகோதரர்களான தியாகராஜன் மற்றும் சந்தோஷ் இடையே ஏற்பட்ட தகராறில், சந்தோஷ் கட்டையால் தாக்கி தியாகராஜனை கொலை செய்தார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தியாகராஜனின் உடலை அம்மாபேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பிச் சென்ற சந்தோஷை போலீசார் கைது செய்தனர்.